பலரின் கவனத்தை ஈர்த்த காரைநகர் பசுமை செயற்றிட்டம்.

131

காரைநகரில் ‘மரம் வளர்ப்போம்’ பசுமை செயற்றிட்டம் ஆரம்பம்

2026ஆம் ஆண்டின் முதல் பசுமை செயற்றிட்டமாக ‘மரம் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் மரம் நடுகை செயற்றிட்டம் காரைநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஒன்றுபட்ட பசுமை காரைநகர் திட்டத்தின் பூரண அணுசரணையுடன் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் முதற்கட்டமாக காரைநகர் வரவேற்பு வளைவு மற்றும் கசூரினா கடற்கரை பகுதிகளில் சுமார் 200 புங்கை மற்றும் மருத மரங்கள், பாதுகாப்பு மதில்களுடன் நாட்டப்பட்டுள்ளன.


இந்த மரம் நடுகை செயற்றிட்டம் ஒன்றுபட்ட பசுமை காரைநகர் திட்டத்தின் தலைவர் ந. அன்புமணி அவர்களின் ஏற்பாட்டில், நேற்றைய தினம் மாலை 4.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது.


இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் பங்குபற்றி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினர்.

‘மரம் வளர்ப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஆரம்பிக்கப்பட்ட இம்மரம் நடுகை செயற்றிட்டம், எதிர்வரும் காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.