90.8 மில்லியன் ரூபாய் போதைப்பொருளுடன் மலேசிய நாட்டவர் கைது.!!

88

சுமார் 90.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 கிலோ 816 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் மலேசியாவைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.