70 ஆயிரம் டாலர் பரிசின் பெயரில் நடந்த மோசடி – பெண் கைது.!

152

பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் ராஜகிரிய, கொஸ்வத்தையைச் சேர்ந்த 40 வயதுடையராவார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், வாட்ஸ்அப் மூலம் ஒருவர், 70,000 டாலர் மதிப்புள்ள பரிசுப் பார்சலை வழங்குவதாகக் கூறி, ஒரு பெண்ணிடம் பெருந்தொகை பணத்தை மோசடி செய்து, அதை அவரது கணக்கில் வரவு வைத்தது தெரியவந்தது.