6 வாகனங்களுடன் மோதிய பஸ்; பெண் ஒருவர் பலி; சாரதி கைது – 12 பேர் காயம்.!!

100

 

கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மொலகொட – மங்களகம பகுதியில் இன்று (22) நண்பகல் அளவில் சாரதி பயிற்சிப் பாடசாலை வாகனங்கள் மற்றும் பயிற்சித் தேர்வுக்காக வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது தனியார் பஸ் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.