209 ரன்களையும் காப்பாற்ற முடியாத CSK – பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுக்களால் வெற்றி.!

118

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டி அணிக்கு தொடர்ச்சியான இரண்டாவது தோல்வியாக அமைந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சன் 7 ரன்களில் வெளியேறியபோதிலும், ஆயுஷ் மாத்ரே 43 பந்துகளில் 73 ரன்கள் விளாசி அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 28 ரன்களும், சிவம் துபே 45 ரன்களும் பெற்றனர்.

பதிலுக்கு விளையாடிய பஞ்சாப் அணியில் பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அணியை முன்னேற்றினார். மேலும் பிரப்சிம்ரன் சிங் 43 ரன்களும், கூப்பர் கான்னோலி 36 ரன்களும் சேர்த்தனர்.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வலிமையை வெளிப்படுத்தியதுடன், சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு குறைபாடுகளை வெளிக்கொணர்ந்துள்ளது. தொடரில் சிஎஸ்கே அணி மீள எழ வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.