2027 மகளிர் உலகக் கோப்பை துடுப்பாட்டப் போட்டிக்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மாணவி அக்ஷராஸ்ரீ தெரிவு!

78

2027 U-19 மகளிர் உலகக் கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியில் 25 பேர் கொண்ட இலங்கைத் தேசிய குழாமில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த மாணவியான அக்ஷராஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்தும், வடமாகாணத்திலிருந்தும் தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள முதல் பாடசாலை மாணவி எனும் வரலாற்றுப் பெருமையை அக்ஷராஸ்ரீ பெற்றுச் சாதித்துள்ளார். வாழ்த்துக்கள்….