2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பொதுத்தகவல் தொழில்நுட்பத் பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியீடு.

159

2025 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றின் மூலம் பரீட்சார்த்திகள் உத்தியோகப்பூர்வ பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்காக மொத்தம் இரண்டு இலட்சத்து 235 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களில், ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 598 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாகவும், 637 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களில் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் மாத்திரமே பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.