15 சீட் கேட்ட கமல் – திமுக சொன்ன ஒரே வார்த்தை!

180

15 தொகுதிகள் கோரிக்கை; கோவையையும் மொத்தமாக கேட்ட கமல்ஹாசன் – திமுகவின் பதில் என்ன? டார்ச் லைட் தொடருமா?

வாக்கு சதவீதம் 8 பெறாத நிலையிலும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் (மநீம) கடந்த தேர்தல்களில் பயன்படுத்திய ‘டார்ச் லைட்’ சின்னம் மீண்டும் அந்தக் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன.

 

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் 15 தொகுதிகளை கமல்ஹாசன் கோரியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தை மையமாக வைத்து கமல்ஹாசன் முன்வைத்துள்ள இந்த கோரிக்கை அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

ஆனால், திமுக தலைமையோ மக்கள் நீதி மய்யத்திற்கு மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கான சின்ன ஒதுக்கீட்டு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டப்பேரவைத் தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் பயன்படுத்திய ‘டார்ச் லைட்’ சின்னம் மீண்டும் அந்தக் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், தொகுதி பங்கீட்டில் இறுதியாக திமுக எத்தனை இடங்களை ஒதுக்கும், அதற்கு கமல்ஹாசன் சம்மதிப்பாரா என்ற கேள்விகள் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.