14 வயது மாணவனை துஷ்பிரயோகம் செய்ததாக அதிபர் கைது.!

171

மாத்தளைப் பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவர், 14 வயது மாணவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் செவ்வாய்க்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். மகாவெல பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சம்பவம் வெளிச்சத்துக்குவந்துள்ளது.

முறைப்பாட்டின் பின்னர், சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், பல இடங்களில் மறைந்து இருப்பதாக பிரதேச மக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். இறுதியில், தேடப்பட்டு வந்த அதிபர் செவ்வாய்க்கிழமை (31) காலை மகாவெல பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மகாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குற்றச்சாட்டின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.