110 ஆண்டுப் பெருமையில் செட்டிகுளம் மகாவித்தியாலயம் – பிரமாண்ட பொங்கல் விழா (புகைப்படங்கள் இணைப்பு)

165

செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 110 பானைகளில் பிரமாண்ட பொங்கல் விழா

வவுனியா மாவட்டத்தின் பழமைமிகு பாடசாலைகளில் ஒன்றான செட்டிகுளம் மகாவித்தியாலயம் தனது 110 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, பாடசாலை வளாகத்தில் 110 பானைகளில் பிரமாண்ட பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடாத்திய.

இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், தற்போதைய மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், கல்விச் சமூகத்தினர் மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

தமிழர் பாரம்பரியத்தையும், ஒற்றுமையையும், நன்றியுணர்வையும் எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்தப் பொங்கல் விழா, அனைவரின் ஒத்துழைப்புடனும் உற்சாகமான சூழலிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் 110 ஆண்டுகால கல்விப் பயணத்தைப் போற்றும் இந்த நிகழ்வு, பாடசாலையின் வரலாற்றில் மறக்கமுடியாத ஓர் இனிய நினைவாக அமைந்தது.