100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்; சாரதியின் உறக்கத்தால் விபரீதம்

69

நோர்ட்டன் ப்ரிட்ஜ் – லக்சபான பிரதான வீதியில் அவிசாவளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

காரில் பயணித்த ஐவரில் மூவர் லக்ஸபான வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதோடு, மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காரை செலுத்தியவர் உறங்கியதன் காரணமாகவே இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தினால் கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.