ஹெரோயினுடன் பெண் பொலிஸ் அதிகாரி கைது – இன்று நீதிமன்றில் முன்னிலை

219

ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது
– இன்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றி வந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பதுளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பகஸ்தோவ பொலிஸாரால் நேற்று (ஜனவரி 26) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யும் வேளையில் சந்தேகநபரிடமிருந்து 4.2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும், குறித்த போதைப்பொருள் விநியோகிக்கும் நோக்கத்திற்காக வைத்திருந்தாரா என்பதைக் கண்டறிய மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தரை இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.