ஹட்டன் வனப்பகுதியில் மீண்டும் தீ வைப்பு சம்பவம் – மக்கள் சந்தேகம், போலீஸ் எச்சரிக்கை.!

125

ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (27) பகல் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் கடுமையான வறண்ட வானிலை நிலவி வரும் நிலையில், இவ்வாறான சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கவலை மற்றும் சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

காடுகளுக்கு தொடர்ந்து ஏதோ ஒரு குழுவினர் திட்டமிட்டு தீ வைப்பதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். இந்த தீயை கட்டுப்படுத்த ஹட்டன் வன அலுவலக அதிகாரிகளும் பிரதேசவாசிகளும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். வறட்சியின் காரணமாக தீ வேகமாக பரவுவதால் நிலைமை மேலும் கவலைக்கிடமாக மாறும் அபாயம் காணப்படுகிறது.

இதனிடையே, காடுகளுக்கு தீ வைப்பது குற்றச்செயல் என கினிகத்தேன பொலிஸார் எச்சரித்துள்ளனர். தீ வைப்பவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.