வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது.!!

158

கடந்த புதன்கிழமை (11) நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்டத்தின் 50 ஏக்கர் வனப்பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஹட்டன் நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

ஹட்டன் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி மற்றும் நோட்டன் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரு சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 52 மற்றும் 37 வயது இருவரும் நோட்டன் – ஒஸ்போன் பகுதியில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது. விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட வேட்டையாடிய மரை இறைச்சியை பாவனைக்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.