வெடுக்குநாறிமலையில் தடையின்றி நடந்த மஹா சிவாரத்திரி!

163

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் இன்றையதினம் சிறப்பாக இடம்பெற்றது.

இதன்போது மதியம் 2மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுட்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று காலை முதல் பொலிசார் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவித தடைகளும் விதித்திருக்க வில்லை.

இம்முறை இரவுநேர பூஜகளை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை மழை பெய்திருந்தமையால் மலைக்குச்செல்லும் காட்டுப்பாதை முழுமையாக சேதமடைந்திருந்தது இதனால் அடியவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் ஆலயத்தை செல்லவேண்டிய நிலை ஏற்ப்பட்டிருந்தது.