வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் கோலாகலம்!

223

வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல்  கோலாகலம்.

வெங்கலசெட்டிகுளம் பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான தைப்பொங்கல் நிகழ்வு, பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் தலைமையில் 23.01.2026 அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாரம்பரிய முறையில் அலங்காரிக்கப்பட்டு இயற்க்கைக்கு நன்றி செலுத்தும் படியாக  சக்கரை பொங்கல் பொங்கி வழிபடப்பட்டதுடன், இந்நிகழ்வில் ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். நல்லிணக்கம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் தைப்பொங்கல் விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.