வீரபுரம் வீதி காபட் வீதியாக மாறுகிறது.

288

வெங்கல செட்டிகுளம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வீரபுரமம் கிராமத்தில் அமைந்துள்ள குறித்த 3ஆம் வீதி கார்பட் வீதியாக மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

போக்குவரரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் 2025ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த இத்திட்டம் நடமுறைப்படுத்தப்படுகிறது. சுமார் 1.4 கிலோமீட்டர் நீளமுடைய இவ்வீதி அபிவிருத்தி பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டு, கார்பட் இட்டு செப்பனிடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றது.

இவ் வீதி அபிவிருத்தி தொடர்பாக வீரபுரம் மற்றும் அயல் கிரமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக பாடசாலை மாணவர்கள் மற்றும் தினசரி பயணிகள் பெரிதும் பயனடைவார்கள் என்பதால் குறித்த வீதி தெரிவு செய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரேச சபை உறுப்பினர் இசையாஸ் மிரால் (தேவா) கருத்து தெரிவித்துள்ளார்.