வீதியால் நடந்து சென்ற 13 வயது சிறுவன் லொறி மோதி பலி.!!

139

உடவளவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, உடவளவை – தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உடவலவ பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது. விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடவளவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.