வீட்டுக்கு வந்த நபரை வெட்டிக் கொன்ற உரிமையாளர் – கொலையாளி அதிரடி கைது.

114

அனுராதபுரம், சாலியபுர – தெப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வீட்டின் உரிமையாளருக்கும், வீட்டுக்கு வருகை தந்த நபர் ஒருவருக்கும் இடையில் திடீரென ஏற்பட்ட தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதன்போது ஆத்திரமடைந்த வீட்டு உரிமையாளர், கூரிய ஆயுதத்தால் அந்த நபரைத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சாலியபுர பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய வீட்டு உரிமையாளரை அனுராதபுரம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.