விவசாயிகளுக்கு நற்செய்தி! நெல் கொள்வனவுக்காக ரூ. 10 பில்லியன் ஒதுக்கீடு.

75

பெரும் போகத்தில் எண்பதாயிரம் மெட்ரிக் டன் நெல் வாங்குவதற்கு அரசாங்கம் பத்து பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு நேற்று (12) உரையாற்றிய போது அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விவசாய சமூகத்திற்கு மேலும் வசதியளிக்கும் வகையில் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பெரிய அளவிலான நெல் உலர்த்தும் இயந்திரங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பெரும் போகத்தில் நெல் அறுவடையை அரசாங்க உத்தரவாத விலையில் வாங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, அரசாங்கம் நாட்டு நெல்லுக்கு ரூ. 120, சம்பா நெல்லுக்கு ரூ. 130 மற்றும் கீரி சம்பா நெல்லுக்கு ரூ. 140 விலைகளை வழங்கியுள்ளது.

மேலும், சிறிய நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல் வாங்க கடன் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் வசந்த குறிப்பிட்டுள்ளார்.