வாரிக்குட்டியூரில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவன் பலி.!!

212

வவுனியா- வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(5.2.2026) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்றைய தினம் இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒரு மாணவன் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்தில் வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார். மேலும், விபத்து தொடர்பான விசாரணைகளை பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.