வாகன ஓட்டுனரா நீங்கள்? ஜூலை முதல் வரும் புதிய நடமுறை!

173

புதிய ‘புள்ளி’ விதிமுறை: GovPay மூலம் அபராதம் மற்றும் டிஜிட்டல் குறைப்பு புள்ளி முறை!

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு குறைப்புப் புள்ளிகள் வழங்கும் புதிய முறை, எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரதி பொலிஸ் மா.அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

சாரதிகள் விதிகளை மீறும்போது அபராதங்களை GovPay தளம் மூலம் செலுத்த முடியும். இதன் மூலம் நாடளாவிய ரீதியில் பொலிஸார் அபராத வசூல் முறையை மெய்நிகர் முறையில் கையாள முடியும்.

அதன்படி புதிய டிஜிட்டல் குறைப்பு புள்ளி (Digital Demerit Point) முறை தொடங்கப்படும். இதனால், போக்குவரத்து விதி மீறல்கள் சாரதியின் கணக்கில் புள்ளியாக பதிவு செய்யப்படும், இது எதிர்காலத்தில் வாகன ஓட்ட அனுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து, போதைய பொருள் பாவனைக்காக வாகனம் ஓட்டியதாக சுமார் 300 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றை தடுக்கும் நோக்கில், புதிய பரிசோதனை உபகரணம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா.அதிபர் அறிவித்தார்.

போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் சம்பவங்களைக் குறைப்பதற்காக, பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களில் தேவையற்ற உதிரிப்பாகங்களை அகற்றாமல் வாகனம் ஓட்டிய சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள்:
வாகன ஓட்டநிலை பாதுகாப்பை வலுப்படுத்தல்
வாகன விபத்துகளைக் குறைத்தல்
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தல்
என்பவற்றை நோக்கமாகக் கொண்டவை.

புதிய முறைமைகள் அமல்படுத்தப்படுவதால், பொது மக்கள் மற்றும் சாரதிகளுக்கு விதிகளை பின்பற்றுதல் மிகவும் அவசியம் என போலீஸ் வலியுறுத்தி வருகின்றனர்