வாகனப் பதிவு முறைகேடு விசாரணை: மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் கைது.!

106

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக பணியாற்றும் கமல் அமரசிங்க, வெள்ளிக்கிழமை (27) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது, வாகனப் பதிவு தொடர்பான முறைகேடுகள் குறித்து நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் தொடரப்பட்டு வருகின்றன.