வாகனத்துடன் சிக்கிய ஐஸ் போதைப்பொருள் கும்பல்.!

149

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (02.02.2026) புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திம்பிலி பகுதியில் வாகனத்துடன் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 5 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், புதுக்குடியிருப்பு மற்றும் மன்னாரை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.