வாகனக் கனவில் இருப்பவர்களுக்கு நற்செய்தி! இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்.

170

வாகன தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் நேற்று(28.01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இலங்கை வாகன இறக்குமதிக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டு அதிக அளவு வாகன இறக்குமதிகள் ஏற்பட்டதால் வாகன இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில் வாகன இறக்குமதிக்காக கணிசமான தொகை செலவிடப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு இலங்கை 3,60,117 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.