வவுனியா முகத்தான்குளம் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் தேசிய வேலைத்திட்டம்!

294

பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

பேரிடர் சூழ்நிலைக்கு பிந்தைய சுகாதார அபாயங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (08) முகத்தான்குளம் விக்னேஸ்வர வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. பள்ளி வளாகங்களில் நீர் தேங்கக்கூடிய பாத்திரங்கள், பிளாஸ்டிக் தொட்டிகள் மற்றும் கொசு வளரக்கூடிய இடங்கள் அகற்றப்பட்டன.

உள்ளூராட்சி சபைகள், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அலகு (NDCU), பொது சுகாதார அதிகாரிகள், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்தனர்.

மூன்று நாள் வேலைத்திட்டம் கீழ்க்கண்ட கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது

 

கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து பிரதேச சபையின் ஏற்பாட்டில் செயல்படுத்தும் இந்த திட்டம், டெங்கு பரவலை தடுக்க முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.