வவுனியா பிரமனாலங்குளத்தில் அரசியல்வாதிகளிற்கு எதிராக    ஆர்ப்பாட்டம்!

136

வவுனியா பிரமனாலங்குளத்தில் தமிழ் அரசியல்வாதிகள் பிராந்திய மற்றும் இன அடிப்படையிலான இழிவுபடுத்தும் வெறுப்புப் பேச்சுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதி மக்களால் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

பிரமனாலங்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பொதுமக்கள் இணைந்து பிரமனாலங்குளம் சந்தியில் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது “வெறுப்பு பேச்சுகளை நிறுத்துங்கள்”, “ஒழுக்க விதிகளை உருவாக்குங்கள்”, “அரசியல் நாகரீகத்தை பேணுங்கள்” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பலகைகள் ஏந்தப்பட்டிருந்தன.

இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், வெறுப்புப் பேச்சுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து எதிர்காலத்தில் விவாதங்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.