வவுனியா – பாவற்குளம் காட்டுப் பகுதியில் தீப் பரம்பல்.!!

59

வவுனியா, பாவற்குளம் காட்டுப் பகுதியில் திடீரென தீப் பரம்பல் ஒன்று இன்று (29.08) ஏற்பட்டது.

இதனையடுத்து, பொது மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து விரைந்து செயற்பட்ட பூவரசங்குளம் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததுடன், வவுனியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியையும் பொலிசார் பெற்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

இதன் மூலம் மக்கள் குடிமனைகளுக்குள் தீ பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. வவுனியாவில் கடந்த சில நாட்பளாக வெப்பநிலை அதிகரித்து காணப்படும் நிலையில் பல்வேறு காட்டுப் பகுதிகளிலும் தீப் பரம்பல் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.