வவுனியா ஒலுமடு நெல் உலர்த்தும் தளத்திற்கு ரூ.1.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு.!

162

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஒலுமடு பகுதியில் நெல் உலர்த்தும் தளம் அமைப்பதற்காக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம், 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 1.2 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த அனுமதி கடிதம் 2026 ஏப்ரல் 02ஆம் திகதி ஒலுமடு கமக்காரர் அமைப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராசா சுசீலன் முன்வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம், பிரதேசசபை தவிசாளர் தி. கிருஸ்ணவேணி, உறுப்பினர் செ. சுசீலன் மற்றும் இணைப்பாளர் தவேந்திரராசா (அமலன்) உள்ளிட்டோர் கலந்து கொண்டு அனுமதி கடிதத்தை வழங்கினர்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், உள்ளூர் விவசாயிகளுக்கு நெல் உலர்த்தும் வசதிகள் மேம்பட்டு உற்பத்தித் தரம் உயர வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் விவசாய நடவடிக்கைகள் மேலும் சீர்பெற்று, விவசாயிகளின் வருமானத்தையும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.