வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம்.!!

340

வவுனியாவில போக்குவரத்து பொலிஸாரை மோதிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்ற சம்பவம் இன்று (24.01.2026) காலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, ஏ9 வீதி ஈரப்பெரியகுளம் பகுதியில் வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போக்குவரத்து பொலிஸாரை வாகனத்தினால் மோதிவிட்டு சிறிய ரக வாகனம் தப்பிச் சென்றுள்ளது.

வாகனத்தில் மோதுண்ட பொலிஸார் வீதியோரமாக மோட்டர் சைக்கிளுடன் விழுந்துள்ளதுடன் சிறிய காயங்ளுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.