வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது.!

152

வவுனியாவில் கஞ்சாவுடன் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக இரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை இரட்டைபெரியகுளம் பகுதியில் இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

விசாரணைகளின்படி, விற்பனைக்காக சுமார் 1 கிலோ 970 கிராம் கஞ்சாவை எடுத்துச் சென்ற நிலையில் குறித்த இரு பொலிஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த கஞ்சாவும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் சாய்ந்தமருது மற்றும் மஸ்கெலியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.