வடமராட்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் கைது.!

138

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர், சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 520 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு சுமார் 4 இலட்சம் ரூபாய் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.