லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்: 254 பேர் பலி – இலங்கைப் பெண் காயம்

135

இஸ்ரேல் பாதுகாப்புப் படையினரால் புதன்கிழமை (08) லெபனான் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில், இலங்கைப் பெண்ணொருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், காயமடைந்த பெண் ஆபத்தற்ற நிலையில் இருப்பதாகவும், தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சர்வதேச செய்திகள் தெரிவிப்பதாவது, இஸ்ரேல் மேற்கொண்ட இந்த தாக்குதல்கள் குறுகிய நேர இடைவெளியில், சுமார் 10 நிமிடங்களுக்குள் பலத்ததாக நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக பெரும் சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லெபனான் சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இந்த தாக்குதல்களில் சுமார் 254 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 1,165 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்தில் வன்முறைகள் மேலும் தீவிரமடையக்கூடும் என்பதால் சர்வதேச கவனம் இந்த பிராந்தியத்தின் மீது திரும்பியுள்ளது.