லட்சக்கணக்கில் மீட்கப்பட்ட போதைமாத்திரைகள் : கடற்படையினர் விசேட சுற்றிவளைப்பு!

91

புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய கடற்கரை பகுதியில் போதைமாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் இலங்கை கடற்படையினரால் நேற்று (12) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பொதிகளிலிருந்து 108,480 போதைமாத்திரைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடத்தல்காரர்கள் இந்த பொதிகளை நாட்டிற்குள் கொண்டுசெல்ல முடியாமல் கடற்கரையில் விட்டுச் சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர். இந்த போதை மாத்திரைகளை சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.