யாழ் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு தமிழ் பொறுப்பதிகாரி நியமனம்.

73

யாழ். சுன்னாகம் காவல் நிலைய புதிய பொறுப்பதிகாரியாக தமிழ் காவல்துறை அதிகாரியான சி.நிதர்சன் நியமிக்கப்பட்டார்.

ஏற்கனவே கடமை புரிந்த காவல்துறை அதிகாரியான பிறடோ என்பவருக்கு இன்று திடீர் இடமாற்றம் வழங்கபட்டது

இந்நிலையில், இவ்வாறு புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் நியமிக்கப்பட்டார்.

தமிழர் பகுதிகளில் தமிழ் தெரியாத சிங்கள மொழி பேசும் பொறுப்பதிகாரிகளை நியமிக்கின்றதால் மக்கள் தமது பிரச்சினைகளை தெளிவாக கூற முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் காவல்துறை பொறுப்பதிகாரி நியமிக்கப்பட்டதன் மூலம் மக்களுக்கான சேவைகளை திறம்பட செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது