யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் தொடருந்து விபத்து

106

யாழ்ப்பாணம், அரியாலை 13ஆம் கட்டைப் பகுதியில் நேற்று தொடரூந்து மோதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

யாழிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதிப் (Express) ரயிலுடன் ஒரு மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரியாலையைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் மிகக் கடுமையாக காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

பாதுகாப்பற்ற குறித்த தொடரூந்து கடவையில் கடந்த காலங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுவதோடு பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டும், பாதுகாப்பு வேலி அல்லது கட்டுப்படுத்தப்பட்ட ரயில் கடவை இன்னும் அமைக்கப்படவில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.