யாழில் விபத்து: புதுமண பெண்ணும் அண்ணனும் உயிரிழப்பு

247

யாழில் இரட்டை சோகம்: திருமணமாகி 2 மாதங்களில் சகோதரி பலி – சகோதரனும் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை துண்டிச்சந்தி பகுதியில் நேற்று (16.03.2026) மாலை இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சகோதரி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பிரட்லீ மற்றும் அவரது 19 வயது சகோதரி டிலக்ஸி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பவுசருடன் மோதியதில் இந்த துயரமான விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், உயிரிழந்த டிலக்ஸி திருமணம் செய்து வெறும் இரண்டு மாதங்களே ஆன நிலையில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்திருப்பது, அந்த பகுதி மக்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.