யாழில் பக்தர்களுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – இருவர் பலி.!!

109

யாழில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு விபத்திற்கு உள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களை மீட்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு ஒன்று சென்ற சிறிது நிமிடத்திலேயே தலை கீழாக கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதில் பயணித்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது நாளையதினம்(07.03.2026) இடம்பெறவுள்ள பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்காக புறப்பட்டுச் சென்றவேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மூவர் கரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். ஏனையவர்களை மீட்கும் பணியில் கடற்றொழிலாளர்கள், படகோட்டிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.