யாழில் நூற்றாண்டுகால பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

190

யாழில் 200 ஆண்டு பழமையான தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிப்பு.

யாழ்ப்பாணம்: யாழ்ப்பாண மாவட்டம் சண்டிலிப்பாய் மேற்கு – சொத்துப்புடிச்சி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தமிழ்க் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று அடி உயரமும் ஒரு அடி அகலமும் கொண்ட இக்கல்வெட்டில் பல வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. “ஓம்” என்ற மங்கலச் சொல்லுடன் தொடங்கும் கல்வெட்டு, சு. சபாபதிப்பிள்ளை என்ற பெரியவர் கிராம மக்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்படும் வகையில் “வயற்கேணி மடம்” ஒன்றை அமைத்த செய்தியை பதிவு செய்கிறது.

இக்கல்வெட்டை தொல்லியல் திணைக்கள அதிகாரி திரு. விஸ்வலிங்கம் மணிமாறனும், University of Peradeniya வரலாற்றுத்துறை விரிவுரையாளர் கணேசலிங்கம் ஜெயதீஸ்வரனும் ஆய்வு செய்து, அதன் மைப்பிரதியை எடுத்துள்ளனர்.

ஆய்வாளர்கள் தெரிவிப்பதாவது, இக்கல்வெட்டு அக்கால கிராம வாழ்க்கை, நீர்வள மேலாண்மை மற்றும் சமூகப் பண்பாட்டை வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்றுச் சான்றாகும். மேலும், யாழ்ப்பாணத்தின் பண்டைய போக்குவரத்துப் பாதைகள் மற்றும் விவசாயத் தொடர்பான அமைப்புகளை அடையாளம் காண உதவக்கூடும் எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இக்கண்டுபிடிப்பு, யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு மற்றும் சமூக வரலாற்றை மேலும் வலுப்படுத்தும் ஆதாரமாக பார்க்கப்படுகிறது.