யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்.!

102

யாழ்ப்பாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் இன்றையதினம் (02) இடம்பெற்றுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது யாராவது தீ மூட்டினரா என இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் சம்பவம் குறித்து சுன்னாகம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாட்டின் பல பாகங்களிலும் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.