யாழில் சைவசமய பட்டபடிப்புகளை ஆரம்பித்து வைக்கும் இந்தியா தமிழ்நாடு மயிலாடுதுறை தருமை ஆதீனம்

146

சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்தப்புலவர்,  பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக  இந்தியாவின்  திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேரடி தரிசன அருளாசி வழங்குவதற்காக  யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

“சிவாகம கலாநிதி “சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்கள்  (தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.) தலைமயிலான குருமார்கள், சமய சமூக பெரியார்கள் என அனைவரும் இணைந்து வரவேற்றனர்.

சுவாமிகளின் அனைத்து நிகழ்வுகளிலும் “சிவாகம கலாநிதி” குருக்கள் இணைந்து நல்லாதரவுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து யாழ்  சைவ பரிபாலன சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் பட்டப்படிப்புகளுக்கான தொடக்க விழா  ஞாயிற்றுக்கிழமை  (05) நடைபெற்றது.

இதன் போது இலங்கை நாட்டின் பிரதிநிதியாக சைவப்புலவர்  சிவப்பிரியா ராஜ்குமார், தருமை ஆதீனப்புலவரும் இயக்குநருமான சித்தாந்த சரபம் அருணைவடிவேல் முதலியார் பாலறாவாயனால் தருமை ஆதீன நட்சத்திரக் குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாணையின் வண்ணம் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.