யாழில் அரச பேருந்து ஓட்டுநரின் அசமந்த போக்கு;ஆபத்தில் பயணிகள் உயிர்.!!

90

யாழ்ப்பாணத்தில் மதுபோதையில் பேருந்து செலுத்திய குற்றச்சாட்டில் இலங்கை போக்குவரத்து சபையின் ஓட்டுநர் ஒருவர் யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அரச பேருந்து அதிகளவான பயணிகளுடன், அதிக வேகத்தில் பயணித்துள்ளது.

இதனை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளார்.

சோதனையின் போது ஓட்டுநரிடம், ஓட்டுநர் அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை. அத்துடன் அவர் மது போதையில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.