மோட்டார் சைக்கிள் விபத்து: 23 வயது இளைஞர் பலி.!!

171

தெஹியத்தக்கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலன்னறுவை – மஹியங்கனை வீதியின் 41ஆம் மைல்கல் பகுதியில் நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 04) இரவு மோட்டார் சைக்கிள் ஒன்று மரத்துடன் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலன்னறுவை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் கடுமையாக காயமடைந்த ஓட்டுநர் தெஹியத்தக்கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சிறிபுர பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தெஹியத்தக்கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.