மூன்று வயது சிறுமி அடித்துக் கொலை – தாயார் கைது.!!

135

மூன்று வயது சிறுமி கொடூரமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது தாயார் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – மத்தேகொட, மாகம்மன சமகி மாவத்தையைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதன்படி, “ஆரம்பத்தில் சிறுமிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகக் கூறி, குறித்த தாய் சிறுமியை கொழும்பு ஹோமாகம மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதன்போதே சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இருப்பினும், பின்னர் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இது வெறுமனே ஒரு மருத்துவ நிலை அல்ல, மாறாக ஒரு கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட கொலை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதன்படி இந்தக் குற்றத்திற்கான முக்கிய காரணம், அந்தப் பெண் தனது புதிய கணவரை ‘தந்தை’ என்று சிறுமி அழைக்க மறுத்ததே ஆகும். கைது செய்யப்பட்ட பெண் தனது சட்டப்பூர்வ கணவரிடமிருந்து பிரிந்து சுமார் மூன்று மாதங்களாக ஒரு வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாக தெரிக்கப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில், தாயும் சம்பந்தப்பட்ட நபரும் சிறுமியை பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள், புகைப்படங்கள், காவல்துறைக்கு கிடைத்துள்ளன.

இறந்த சிறுமியின் உடலில் எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளிப்புற காயங்களை மருத்துவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

 

மேலும், தாய் சிறுமியை கொடூரமாக உலுக்கி தரையில் வீசி தாக்கியதாகவும், கைகள், கால்கள் மற்றும் பல்வேறு கருவிகளால் கடுமையாக தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தக் கொடூரமான கொலையில் நேரடியாக தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான தாயாரின் கணவர் ஏற்கனவே அந்தப் பகுதியை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.