மூத்த ஊடகவியலாளர் ஏ.என்.எஸ். திருச்செல்வம் காலமானார்.

150

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும், அதன் வடக்கு மாகாண இணைப்பாளரும், அரை நூற்றாண்டுக்கும் மேலான ஊடக அனுபவம் கொண்ட மூத்த பிராந்திய ஊடகவியலாளருமான ஏ.என்.எஸ். திருச்செல்வம் (74) காலமானார்.

வடக்கு மாகாணம், வடமராட்சி புலோலியைச் சேர்ந்த திருச்செல்வம், 1975-ம் ஆண்டு தனது ஊடகப் பயணத்தைத் தொடங்கினார்.

அவரின் இறுதி மூச்சு வரை ஊடகப்பணியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கிய அவர், ஒரு பிராந்திய ஊடகவியலாளர் எவ்வாறு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும் என்பதற்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தலைநகர் மற்றும் வடக்கு மாகாணத்திலிருந்து வெளிவரும் பல்வேறு செய்தித் தாள்களில் தனது கனதியான கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.

யுத்த சூழல் உள்ளிட்ட சவாலான காலகட்டங்களிலும், ஊடக நேர்மை தவறாமல் களப்பணியாற்றியமைக்காக ‘கலாபூஷணம்’ மற்றும் ‘கலைப்பருதி’ உள்ளிட்ட பல கௌரவ விருதுகளைப் பெற்றுள்ளார்.