மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி – ஜெய்ஸ்வால் அதிரடி.!

120

ஐபிஎல் 2026 தொடரின் 13வது போட்டியில், மழையால் 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது.

ராஜஸ்தான் அணிக்காக தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யவன்ஷி அதிரடியாக ஆடியனர். முதல் ஓவரிலேயே 22 ரன்கள் குவிக்கப்பட்ட நிலையில், சூர்யவன்ஷி 39 ரன்களும், ரியான் பராக் 20 ரன்களும் எடுத்தனர்.

ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின்னர் மும்பை அணியின் துவக்கத்தில் ரயான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஆகியோர் விரைவில் அவுட் ஆனதால் அணி திணறியது.

திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்ததால் மும்பை அணி 4.6 ஓவர்களில் 46 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் நமன் திர் மற்றும் ரதர்ஃபோர்ட் சில நேரம் எதிர்த்து விளையாடினாலும், தொடர்ச்சியான விக்கெட் இழப்பால் அணி மீள முடியவில்லை.

இறுதியில் மும்பை அணி 11 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்ததால், ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.