முடி உதிர்வு அதிகமா? இந்த ஒரு எண்ணெய் போதும்!

133

 பொதுவாக பலருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான்.தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில், முடி நீளமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • தேங்காய் எண்ணெய்- 2 கப்
  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி
  • தயாரிக்கும் முறை
    முதலில் கறிவேப்பிலை சுத்தம் செய்து நிழலில் உலர வைத்து எடுத்துக்கொள்ளவும்.இதையடுத்து ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்சிக் கொள்ளவும்.

பின் தேங்காய் எண்ணெய் லேசாக சூடானதும் அதில் கறிவேப்பிலை இலைகளை மிக்ஸியில் பொடியாக அரைத்து சேர்த்து நன்கு காய்ச்சவும்.எண்ணெய் நன்கு சூடு ஆறிய பின்னதாக ஒரு டப்பாவில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளவும்.இந்த கறிவேப்பிலை எண்ணெயை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர தலைமுடி அடர்த்தியாகவும், நீளமாகவும் நன்கு வளரும்.