முச்சக்கர வண்டி மோதலில் 3 பிக்குணிகள் உட்பட 4 பேர் படுகாயம்.!

144

சூரியவெவ – நுஜேகந்த பகுதியில் செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற விபத்தில் மூன்று பிக்குணிகள் மற்றும் ஒரு ஆண் உட்பட நால்வர் கடுமையாக காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உப வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திடீரென நுழைந்த முச்சக்கர வண்டி, அப்போது அந்த வழியாக பயணித்த லொறியுடன் மோதியுள்ளது. அதன் பின்னர் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு சிறிய லொறியுடனும் மோதியுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளில், முச்சக்கர வண்டி சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பிக்குணிகளும் சாரதியும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பாக சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.