முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து ரயிலில் குதிக்க முயன்ற நபர்.!

106

கொழும்பு பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் [23.06.2026] இடம்பெற்ற சம்பவத்தில், நபர் ஒருவர் தனது முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த பின்னர் ரயிலின் முன் குதித்து உயிரை மாய்க்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்களின்படி, குறித்த நபர் தனது முச்சக்கர வண்டியை தீயிட்டு எரித்த பின்னர், ருஹுணு குமாரி ரயில் வருகை தரும் நேரத்தில் அதற்கு முன் குதிக்க முயன்றுள்ளார். எனினும், அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக தலையிட்டு அவரை காப்பாற்றியுள்ளனர். பின்னர் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.