முக அழகைக் கெடுக்கும் வாய்ச் சுற்றுக் கருமை – எளிமையான வீட்டு வைத்தியம்!

163

சிலருக்கு வாயைச் சுற்றியுள்ள பகுதி மட்டும் கருப்பாக இருக்கும்.அதிகப்படியான மெலனின் உற்பத்தி, ஹார்மோன் மாற்றங்கள், வறட்சி அல்லது நீரிழப்பு, காப்ஃபைன் அதிகம் அருந்துவது, போதுமான சரும பராமரிப்பை கொடுக்காமல் இருப்பது காரணமாகும்.

அந்தவகையில், வாயை சுற்றியுள்ள கருமையை நீக்க உதவும் இயற்கை பேக்கை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மஞ்சள்- 1 ஸ்பூன்
தயிர்- 2 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூளை எடுதது, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.பின் அதை வாயைச் சுற்றியுள்ள பகுதியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பின்பு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.இதனை வாரத்திற்கு 3 முறை தொடர்ந்து பயன்படுத்தி வர வாயை சுற்றியுள்ள கருமை நீங்கும்.பின் ஒரு பஞ்சை இதில் நனைத்து முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும்.அடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.இப்படி தினமும் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.